Saturday, July 25, 2026
No menu items!

இராமலிங்கம் சந்திரசேகர்

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

“எந்த கொம்பனாக இருந்தாலும், உலகின் எந்த மூலையிலும் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகிறது,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் சட்ட ஒழுங்கை...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி -அமைச்சர் !!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மேலும் கூறுகையில், எனது தாய் மொழி...

மக்களின் காணிகளைக் கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை; அமைச்சர் பிமல் ரத்னாயக்க!

மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரசுடைமையாக்குவதற்கு எவ்வித அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை என, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமைக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஒத்திவைப்பு...

மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு..!

"உழைக்கும் மக்கள் உட்பட எமது நாட்டு மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது. மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது." என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் காலி முகத்திடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மேலும்...

கடற்றொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்!

யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அமைச்சர், யாழ். பாசையூருக்கு இன்று (25.04.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். பாசையூர் மீன் சந்தைக்கு சென்று அதனை பார்வையிட்டதன் பின்னர், இறங்குதுறைக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டார். அத்துடன், பாசையூர்...

NPPயின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டம்..!

தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று (23.04.2025) இடம்பெற்றது. சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் யோகேஸ்வரன் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற பரப்பரை கூட்டத்தில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி பிரதேச அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், வேட்பாளர்கள் உட்பட...

நானும் ரௌடி தான் – அமைச்சர் சந்திரசேகர்..!

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழில் நேற்று (17/04/2025) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட...

அமைச்சர் விஜித ஹேரத் யாழ் வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பு..!

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், யாழ்ப்பாண வர்த்தகர்களை நேற்று (12/04/2025) சந்தித்து கலந்துரையாடினார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளர். இந்த நிலையில் நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண வர்த்தகர்களை சந்தித்து...

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – சந்திரசேகர்!

1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ரமழான் வாழ்த்துச் செய்தி..!

இறை தூதர் நபிகள் நாயகம் போதித்த  சமத்துவம், சுய கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அன்பு, பரிமாற்றம், ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றை நாம் அனைவரும் கடைபிடித்து நாட்டில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவோம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது ரமழான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அவர் விடுத்துள்ள ரமழான் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img