தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த எம்.எஸ். தோனியை மன்னிக்கவே மாட்டேன் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் எம்.எஸ். தோனியை மன்னிக்க மாட்டேன். தோனி கண்ணாடியில் அவரது முகத்தை பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், அவர் எனது மகனுக்கு என்ன செய்தார் என்பதெல்லாம் தற்போது தான் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதை எனது வாழ்நாளில் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.

மேலும், யுவராஜ் மீது தோனிக்கு அதிக பொறாமை எனவும் ஐ.பி.எல் 2024 இல் சென்னை அணி தோனியின் செயல்களால் தோல்வியடைந்தனர் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here