அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய துணைத் தலைவர் கமலா ஹரிஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
தோல்விக்குப் பிறகு, அவர் வாஷிங்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் முன்னிலையில் நாட்டு மக்களுக்கும் உரையாற்றினார்.
அப்போது, ட்ரம்பின் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாரிஸ், ட்ரம்புடன் அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்துக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பேரணிகளின் போது, டொனால்ட் ட்ரம்பை விமர்சித்த ஹரிஸ், ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால், நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும் என கூறினார்.
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.








