மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமடபிட்டிய பகுதியில் கடந்த 22ஆம் திகதி நரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மணக்குளம், காக்கைபள்ளி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (24.12.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரவிட்ட பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 53 வயதுடைய தந்தை மற்றும் மகன் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







