பெந்தோட்ட கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாராமோட்டர் விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று 29ஆம் திகதி பெந்தோட்ட  பொலிஸ் பிரிவில் உள்ள, கடற்கரை வீதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பாராமோட்டர் பயணத்தின் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ள போதும் பாராமோட்டரை செலுத்திய கொலம்பிய நாட்டவர் உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெந்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here