வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் (21.08.2025) பாடசாலை நாளில் நடைபெறவுள்ளதால், யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்கச் செய்வதற்காக இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தி, நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்குமாறு பணித்துள்ளார்.








