நாடளாவிய ரீதியில் விரைவில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத் தலைவர் நந்தன ரணசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்தில் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.








