CWC சிவாங்கியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.
போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி.

இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.
நாடுகள் கடந்த பயணம் இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
அந்த வகையில், லண்டனில் சுற்றித்திரியும் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“அங்க என்ன பண்ணுறீங்க?” என விசாரித்து வருகிறார்கள்.









