நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் உணர்திறன் குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது என இன்று வெளியிடப்பட்டுள்ள கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) AirSL கண்காணிப்புத் தளத்தில் காட்டப்பட்ட அளவீடுகளின்படி, மன்னாரில் 153, காலி கோட்டையில் 151, தம்புள்ளையில் 135, பதுளையில் 120, அம்பாந்தோட்டையில் 128, நுவரெலியாவில் 113 மற்றும் குருணாகலையில் 115 என காற்று தரச் சுட்டெண் (AQI) பதிவாகியுள்ளது.

மாசு அளவு அதிகரித்திருக்கும் போது சுவாச நோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் அல்லது கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here