நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களைக் கருத்திற் கொண்டு வலுசக்தி அமைச்சு செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் M.L.A.M ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானம் தவறானது என ஹிஸ்புல்லா கூறினார்.

உரிய தரப்பினருடன் கலந்துரையாடியே இந்த முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தற்போதைய காலகட்டத்தில் சலுகைகளை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைக்கக் கூடாது என குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here