நாட்டில் வாழும் ஒரு தரப்பினர் அரசியல் ரீதியாகத் தாழ்த்தப்பட்டு இருப்பது பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

எதிர்பார்க்கும் பொருளாதார அந்தஸ்த்தை அடைவதற்கு அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

உற்பத்தி பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்கள் ஆர்வமாக இருந்தாலும் அதற்கான காணிகள் இன்றி அவர்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

யுத்தகாலத்தில் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுடைய காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என சபையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இருக்கையில் எப்படி உற்பத்தி பொருளாதாரத்தைப் பற்றி பேசுவது எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here