Tuesday, June 16, 2026
No menu items!

குவைத்

கள்ளச்சாராயம் குடித்து குவைத்தில் 40 இந்தியர்கள் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அல் ஷுயூக் எனும் பகுதியில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை வாங்கி பலர் குடித்துள்ளனர். இதனால், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் எனவும், இதுவரையில் சிகிச்சை பலனின்றி இந்தியர்கள் உள்பட 10 வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த...

புதிய இராஜதந்திரிகளாக ஐவரை நியமனம் செய்த ஜனாதிபதி..!

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய...

குவைத் தீ விபத்தில் ஐந்து உயிரிழப்பு!!!

குவைத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கி ஐந்து தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்கள் தமிழ்ச்சங்கங்கள் மூலம் கிடைத்துள்ளன. எனினும், உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு குவைத்தில் மங்காப் நகரில் அடுக்குமாடி...

பெண்களுக்கு இமோஜி அனுப்பினால் சிறை..!

அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்டின் இமோஜியை அனுப்பினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. சவுதி மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் குறித்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அத்துடன், சிறைத்தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் இலங்கை தேயிலை.

பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு தொகைத் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. காசாக்கு அனுப்பி வைக்கப்படும் தேயிலை, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் பலஸ்தீனத்தின் இலங்கைக்கான தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியா, எகிப்து மற்றும்...

நாடு திரும்பிய குவைத்தில் பணியாற்றிய 26 இலங்கைப் பெண்கள்

விசா காலாவதியான நிலையில் குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று இலங்கை தூதரகத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளனர். அவர்களையும் குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img