பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS ASLAT’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுக்கமைய கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘PNS ASLAT’ என்ற போர்க்கப்பல் 123 மீற்றர் நீளமும், மொத்தம் 243 நிர்வாகக் குழுவினரையும் கொண்டது.
மேலும், ‘PNS ASLAT’ என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் நிர்வாகக் குழுவினர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களைப் பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர், ‘PNS ASLAT’ கப்பல் இன்று (06) நாட்டை விட்டுப் புறப்படுகிறது.








