கொழும்பு துறைமுகம்
உள்நாட்டுச்செய்திகள்
கொழும்பு துறைமுகம் 2025 ஆம் ஆண்டின் எட்டு மாதங்களில் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபம் பதிவு செய்துள்ளது!
2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை (வரிக்குப் பிறகு) பதிவு செய்துள்ளதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் லாபம் ரூ. 18.9 பில்லியன் மட்டுமே இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் ரூ. 13...
உள்நாட்டுச்செய்திகள்
குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்ற தனியார் நிறுவனத்துக்கு அபராதம்!
அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாய் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு நுகர்வோருக்குக் குறித்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ரூபாய் 500,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டுச்செய்திகள்
கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் பலி..!!
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ப்ரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கையில் அது மற்றுமொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் குறித்த சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக...
உள்நாட்டுச்செய்திகள்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரெஞ்சு கடற்படைக் கப்பல்..!
பிரெஞ்சு கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ நேற்று (9) நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
80.65 மீ நீளம் கொண்ட இந்த ஹைட்ரோகிராஃபிக் கப்பலை தளபதி பெர்தியோ டிமிட்ரி வழிநடத்துகிறார். இந்தக் கப்பலில் 58 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
வருகை தரும் குழுவினரும் அதன் தளபதியும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப் குறித்து கலந்துரையாட உள்ளனர். இலங்கை...
புதிய செய்திகள்
தாய்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நோட்டிகா கப்பல்!
நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் நாளை பிற்பகல் இந்தியாவிற்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<!--
-->
உள்நாட்டுச்செய்திகள்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தென் கொரிய கடற்படை கப்பல்!
தென் கொரிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நேற்றையதினம் வருகைதந்த குறித்த கப்பலைக் கடற்படை மரபுகளின் படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
149.5 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், 262 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
கப்பலில் வருகை தந்தவர்கள் நாட்டின் சுற்றுலா தளங்களைப் பார்வையிடவுள்ளதுடன், நாளையதினம் குறித்த கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
புதிய செய்திகள்
நாட்டை வந்தடைந்த ஜப்பானிய கப்பல்கள்!
ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்களான பாங்கோ மற்றும் எட்டாஜிமா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
பாங்கோ கப்பல் 141 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 125 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
67 மீட்டர் நீளம் கொண்ட எட்டாஜிமா கப்பலில் 54 பேர் கொண்ட பணியாளர்கள் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்கள் 4 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட உள்ளன.
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையை வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்..!
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘MURASAME’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று சனிக்கிழமை (3/22/2025) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினர் ‘MURASAME’ கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த...
உள்நாட்டுச்செய்திகள்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்சிய கடற்படை போர்க் கப்பல்..!
பிரான்சிய கடற்படைக் போர்க் கப்பலான பிரொவென்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் கடற்படை மரபுப்படி வரவேற்கப்பட்டது.
இப் போர்க்கப்பல் 142.20 மீற்றர் நீளமும், மொத்தம் 160 நிர்வாகக் குழுவினரையும் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் லியோனல் செக்பெரிட் பணியாற்றுகின்றார்.
இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன்...
புதிய செய்திகள்
நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்!
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுக்கமைய கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'PNS ASLAT' என்ற போர்க்கப்பல் 123 மீற்றர் நீளமும், மொத்தம் 243 நிர்வாகக் குழுவினரையும் கொண்டது.
மேலும், 'PNS ASLAT' என்ற கப்பல் நாட்டில்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


