சினிமாவை கெடுப்பதாக சிலர் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள் என நடிகர் விஜய்யை தாக்கி மன்சூர் அலி கான் பேசியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.

அது பற்றி அவரே தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நான் பேசும்போது ‘சினிமாவை கெடுப்பதற்காக அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள்’ என நான் சொன்னதாக சிலர் திரித்து செய்தி பரப்புகிறார்கள்.

விஜய் கட்சி ஆரம்பிக்கிறார், அவர் புகழை கெடுப்பதற்க்காக, மோகன்லால் மம்முட்டி போன்றவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தடுக்க சினிமா காரர்கள் மீது அவதூறு (பாலியல் புகார்) பரப்புகிறார்கள் என தான் நான் பேசினேன்.

அதை சிலர் மாற்றி, விஜயை நான் தாக்கி பேசியதாக மாற்றிவிட்டார்கள். அப்படி நான் அந்த பேட்டியில் சொல்லவில்லை. முழு பேட்டியையும் பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று மேலும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here