Monday, June 8, 2026
No menu items!

அரசியல் கட்சி

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று நண்பகல் வரை மாத்திரம் நிர்வாக முடக்கலை முன்னெடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு...

பல அரசியல்வாதிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கும் இடையில் தொடர்பு; அமைச்சர் ஆனந்த விஜேபால!

இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளுக்கும் 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகளை அரச புலனாய்வு சேவை (SIS) கண்டறிந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சமகி ஜன பலவேகய (SJB), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட...

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20 ரிட் மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்து மேன்மூறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் அரசியல் கட்சிகளாலும் சுயேச்சைக் குழுக்களாலும் சமர்ப்பிக்கப்பட்டன.

தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்காக வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 5 நாட்களுக்குள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்காகச் செலவிடக்கூடிய...

வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட நபர் தப்பியோட்டம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரயத்தனைங்களை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றத்திற்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அரசியல் கட்சி ஒன்று மிகவும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அப்பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரசியற்கட்சி ஒன்று கட்டாயத்தின் பெயரில் அவர்களுடைய...

கிளிநொச்சி மாவட்டத்தில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு..!

கிளிநொச்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றையதினம் (20.03.2025) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் நேற்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட வேளையில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி,...

வேட்புமனுத் தாக்கல் – வெளியானது விபரம்..!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் நேற்று தொடங்கியது. நேற்று, அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தன. மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், மாவட்டச் செயலகங்களில் தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 4:15 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 20...

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்..!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக இதுவரை மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் தெரிவித்துள்ளார். இன்று (3/14/2025) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு எதிர்வரும் 17ம் திகதி முதல் -20ம் திகதி ...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (28 ) ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (27) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகச் சின்னங்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப பத்திரம் இன்று முதல் மார்ச்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர். வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவை வலியுறுத்தினர். அரசாங்கம் அதன்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img