நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு நாளை முதல் (01) எதிர்வரும் சில தினங்களுக்கு மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடு பனி நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here