சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரைஸ்சேச் (Christchurch) மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் மனுடி நாணயக்கார (Manudi Nanayakkara) 35 ஓட்டங்களை எடுத்தார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ப்ரீ ல்லிங் (Bree Illing) மற்றும் ஜெஸ் கெர் (Jess Kerr) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
நியூசிலாந்து அணி சார்பாக, அதன் தலைவர் சுசி பேட்ஸ் (Suzie Bates) அதிகபட்சமாக 47 ஓட்டங்களையும், புரூக் ஹாலிடே (Brooke Halliday) ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் எடுத்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரில் இலங்கை மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.







