அனுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும், மேலும் இருவருடன் மதுபானம் அருந்தியதன் பின்னர், இஹல கங்ஹிந்திகம பகுதியிலுள்ள வாவியில் நீராடச் சென்றிருந்தபோது இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பொல்கஹவலை மற்றும் பூஜாபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here