தமிழகத்தில் கடலில் குளிக்கச் சென்ற இலங்கை பெண் உட்பட்ட நான்கு பெண்கள் பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எண்ணூர் அருகே கடலில் நேற்று(31) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அலையால் அடித்துச்செல்லப்பட்ட பின்னர் குறித்த பெண்களின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 17 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் வசிக்கும் தேவகி செல்வம் என்ற பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஏனைய மூன்று பேருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.








