தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் தற்போது கார் ரேசிங் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் அவர் தொடங்கியுள்ளார்.
இந்த அணி, டுபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றது.
சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற 24 h சீரிஸ் ஜிடி 3 ஏ.எம் என்ற கார் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேசிங் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி கூறி அஜித் தரவேற்றிய பதிவு வைரல் ஆகியுள்ளது.
‘உங்களது பிரார்த்தனைகளும் ஆதரவும் இன்றி இந்த வெற்றிகள் சாத்தியமில்லை உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், இந்த வெற்றி நிச்சயமாக எமது எல்லைகளைக் கடந்து சிறப்பாக செயல்பட ஊக்கப்படுத்துகிறது’ என அஜித் தெரிவித்துள்ளார்.







