2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை மற்றும் பேப்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய சட்டப்பேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இந்த பிரேரணைக்கு அனுமதி அளித்துள்ளன.
இதற்கமைய 17 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் சிகரெட் கொள்வனவு செய்வது தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குப் பிறகு பிறந்த எந்த ஒரு நபரும் தனது வாழ்நாள் முழுவதும் சிகரெட் கொள்வனவு செய்வதை தடுக்கிறது.
17 வயதிற்குட்பட்டவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை தொடங்காமல் தடுப்பதே இந்த பிரேரணையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் இன்றைய இளம் தலைமுறை வாழ்நாள் முழுவதும் சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.








