இஸ்ரேல் – ஹமாஸ்  போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், அவ் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு அமைச்சரவையில் அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்துள்ளனர்.

அந்தவகையில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் இராஜினாமா செய்துள்ளார். மேலும், தற்போது இஸ்ரேலில் அமைந்துள்ள கூட்டணி அரசில் இடாமரின் ஓட்ஸ்ம் யெஹுடிட் அங்கம் வகித்து வந்த நிலையில், அந்த கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சும் இராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இருப்பினும், ஹமாஸை முழுமையாக அழிக்கும் முன்பு போரை நிறுத்தினால் அவரது கட்சியும் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறும் என அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here