வரலாற்று சிறப்புமிக்க யாழ் நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இருபத்தி ஆறாம் நாள் திருக்கல்யாண வைபவம் நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அலங்கார முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.
பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானின் அருட் கடாட்சத்தினைப் பெற்றுச் சென்றனர்.








