பதுளை – செங்கலடி பிரதான வீதியின் பசறை – 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த மண்சரிவினை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாரிய கற்களும் மரங்களும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here