நேற்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழு, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கைமீது இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதல் நாள் விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நடபெறவுள்ளதோடு, மே மாதத்தில் நாளொன்றில் இரண்டாம் நாள் விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

1988 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை அரச உர நிறுவனத்திற்குச் சொந்தமான பட்டலந்த வீட்டு வளாகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சட்டவிரோத சித்திரவதை கூடம் செயற்பட்டமை தொடர்பில் பட்டலந்த ஆணைக்குழு விசாரித்துள்ளது.

இந்த பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின்படி, குறித்த வீட்டுத் திட்டத்தின் வீடுகளில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் இயக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நளின் தெல்கொடவும் நேரடிப் பொறுப்பாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், படலந்த விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here