புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் (Year-on-Year) 2025 ஒக்டோபர் மாதத்தில் 2.7% ஆக உயர்ந்துள்ளது.

இது 2025 செப்டெம்பர் மாதத்தில் பதிவான 2.1% பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கான மொத்தப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இந்த உயர்வு, நாட்டின் பொருளாதாரத்தில் விலையேற்றம் மீண்டும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல், உணவுப் பொருட்களைப் பொருத்தவரை, 2025 ஒக்டோபரில் உணவுப் பணவீக்கம் 4.1% ஆக உயர்ந்துள்ளது.

2025 செப்டெம்பரில் இது 3.8% ஆக இருந்ததை கருத்தில் கொள்ளும்போது, இந்த அதிகரிப்பு நுகர்வோரின் அன்றாட வாழ்வுக் செலவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here