கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை  கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போலி ஆவணங்களை தயாரித்து 130,000,00 ரூபாவுக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் இவருடன் இந்த மோசடி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படும் மேலும் ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பமுனுகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், நாட்டின் பல பகுதிகளிலும் வீடு கொள்வனவு, விற்பனை மற்றும் புதிதாக வீடு கட்டுதல் ஆகிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களுக்கு எதிராக வெலிசர மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here