பன்னிப்பிட்டிய தெபானாமவில் உள்ள இரும்பு கடை ஒன்றில் இன்று (21) காலை சுமார் 9.05 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரல்ல வீதியில், பொல்வத்தை சந்திக்கு அருகில் அமைந்துள்ள இந்த கடையும், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.

தீயை கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான மூன்று தீயணைப்பு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை எந்த உயிர் சேதமும் பதிவாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதுடன், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here