நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வரவிருக்கும் தேசிய பரீட்சைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக நாளை ஓகஸ்ட் 05 அன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தினமின அரச பத்திரிகை தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் – DMC, பரீட்சைகள் திணைக்களம் ஆகியன கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளன.

வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்ததன்படி, ஓகஸ்ட் மாதம் பொதுவாக குறைந்த மழை வீழ்ச்சி காலமாக இருந்தாலும், தற்போது தீவிர பருவமழை காரணமாக மழை அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் ஓகஸ்ட் 6-8 க்குப் பிறகு மழை குறையும் என்றும், க.பொ.தா உயர்தர பரீட்சை ஆரம்பமாகும் ஓகஸ்ட் 10 அன்று கணிசமாக குறையும் என எதிர்பார்க் கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 அன்றும் 2026 உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5, 2026 வரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலநிலை பாதிப்புகள் இருந்தபோதிலும் பரீட்சைகளை சீராக நடத்துவது மற்றும் மாணவர்கள், பரீட்சை மத்திய நிலையங்களை பாதுகாப்பதற்கான அவசர திட்டங்கள் குறித்து நாளை கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here