கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,734 பேர் 7 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் இருவர் மண்சரிவு காரணமாக காணாமல் போனதாக கருதப்படும் நால்வர் அடங்கலாக இவ்வாறு 6 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நிலவும் காலநிலை காரணமாக 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








