நடிகரும்,தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல மாத காத்திருப்புக்கு மத்தியில் இந்த மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கே. வி. என் புரொடக்சன்ஸ் (KVN Productions) தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவான இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் 2026 ஜனவரி 9 அன்று வெளியாகவிருந்தது.
ஆனால், தணிக்கை (Sensor) சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது தணிக்கைக் குழுவிடமிருந்து ‘A’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம், வரும் ஜூலை 23-ஆம் திகதி திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.








