நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு, நீதித்துறையின் சுதந்திரத்தையும் நடுநிலைத் தன்மையையும் பலவீனப்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற “ரணிலுடன் வாசிப்போம்” என்ற இளைஞர் கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சட்டத் துறையினரிடையே இந்த முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதாக ரணில் குறிப்பிட்டார். சட்டத்துறையில் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோரும், நீதிபதிகளுமே 65 வயதிற்கு மேல் ஓய்வு வயதை நீடிப்பதற்கு எதிராக உள்ளதாகவும், அரசாங்கம் இந்த முன்மொழிவை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இறுதி முடிவு அரசாங்கத்திடமே உள்ளது என்றாலும், இந்த முன்மொழிவுடன் முன்னோக்கி சென்றால் அரசியல் மற்றும் அரசியல் சாராத தரப்புகளிடமிருந்தும் எதிர்ப்பு அதிகரிக்கும் எனவும் அவர் இதன்போது எச்சரித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here