மோட்டார் வாகனம் ஒன்றில் 2 கிலோ 554 மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருளை கடத்தி சென்ற 2 சந்தேகநபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரக்க  பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குறித்த இடத்தில் இருந்து மோட்டார் வாகனத்தை அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி செலுத்த முயன்றபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கமைய 2 சந்தேகநபர்களும், போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட காரும் மேலதிக விசாரணைகளுக்காக தீகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 28 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் பொரளை பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here