சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 77.9 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருவாயாக 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 61.7 சதவீதம் அதிகரிப்புடன் இந்த வருடத்தின் முதல் பாதியில் சுற்றுலா பயணிகளின் வருகை 1.01 மில்லியனாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here