பளை மத்தியகல்லூரியில் (தேசிய பாடசாலை) நேற்று(07.08) காலை 10 மணியளவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பளை மத்தியகல்லூரி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
பளை மத்தியகல்லூரியில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் உடல் நிலையை ஆராய்வற்காக நேற்றைய தினம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் மருத்துவமுகாமிற்கு வைத்தியர் திரு.அருமைத்துரை மற்றும் நிதிபங்காளர் நலன்விரும்பி அன்பு, மற்றும் ஆசிரியர், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.








