யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு  வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்.

மீண்டும் இலங்கைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறு பணத்தினை கொடுத்து ஏமாந்தவரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here