முன்னணி ஹீரோவும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில், நேற்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் They call him OG. இப்படத்தை பவன் கல்யாணின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான சுஜித் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பவன் கல்யாணின் OG திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 150+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் மாஸ் ஓப்பனிங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.







