வாஷிங்டன் – நாசா (NASA), 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனை நோக்கி விண்வெளிப் பயணிக்கும் வரலாற்று முயற்சிக்கு தயாராகி வருகிறது.

Artemis 2 எனப்படும் இந்த மிஷன், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஏவுதலுக்கான பல்வேறு நாள்களை கொண்டு உள்ளது. முதற்கட்டமாக, பிப்ரவரி 5 ஆம் திகதி இரவு இந்தப் பயணத்தை ஆரம்பிக்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த மிஷன், நாசாவின் Artemis திட்டத்தின் கீழ் மனிதர்களை சந்திரனை நோக்கி அனுப்பும் முதல் முயற்சியாகும்.

மிஷனில் பங்கேற்கும் நான்கு விண்வெளி வீரர்கள்:

Reid Wiseman – தளபதி

Victor Glover – பைலட்

Christina Koch – மிஷன் நிபுணர்

Jeremy Hansen – கனடாவைச் சேர்ந்த மிஷன் நிபுணர்

இவர்கள் நான்கு பேரும் Orion விண்கலத்தில் 10 நாட்கள், சந்திரனை சுற்றி பயணிக்க உள்ளனர். சந்திரனில் தரையிறங்காமல், சுமார் 9,260 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றி, பூமிக்கு மீண்டும் திரும்புவார்கள்.

Artemis 1 வெற்றி… ஆனால் சவால்!

2022-ல் நடைபெற்ற Artemis 1 மிஷன் வெற்றிகரமாக சந்திர சுற்றுப்பயணத்தை முடித்தது. ஆனால், அந்த மிஷன் பூமிக்கு திரும்பும்போது, விண்கலத்தின் வெப்பக் கவசம் எதிர்பார்த்ததை விட அதிகமாக எரிந்தது.

இதனை காரணமாகக் கொண்டு, Artemis 2 மிஷன் 2024-ல் இருந்து 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அந்த சிக்கலை சரி செய்ய நாசா புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அமல்படுத்தியுள்ளது.

விண்கலம் மற்றும் ரொக்கெட் தயாரிப்பு நிறைவில்

Artemis 2 மிஷனுக்கான SLS ரொக்கெட், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் (Kennedy Space Center) வாகன தொகுப்பு கட்டிடத்தில் தயாராகி வருகிறது.
Orion விண்கலமும் விரைவில் தயாராகி, எதிர்வரும் அக்டோபரில் இரண்டும் இணைக்கப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சந்திர தரையிறக்கத்துக்கு அடித்தளம்

இந்த மிஷன், சந்திரனில் மீண்டும் மனிதர்கள் தரையிறங்கும் எதிர்கால திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும், ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான வாயிலாகவும் இது பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here