பாதுக்க – பொரளை வீதியில் கொடகம சந்திக்கு அருகில் இன்று (26) காலை சிறிய பாரவூர்தியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மீகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, உணவு விநியோக பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரை நோக்கிச் சென்ற சிறிய பாரவூர்தி, முச்சக்கரவண்டி மீது மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








