பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், நேற்று(30) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பேரணி நடைபெற்றது.

பாகிஸ்தானில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here