சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புள்ளை – ஹபரன வீதியில் இனாமலுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (30) லொறியொன்று பாதசாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடையவர் ஆவார்.

தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கி பயணித்த லொறி பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடந்த நபர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதியும் சிகிச்சைக்காக கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here