பாதாள உலக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 3,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 3,411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.







