புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜூலை 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கற்பிட்டி பொலிஸ் சட்டத்தரணியுடன் இன்று காலை சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து புத்தளம் நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல புத்தளம் நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here