அம்பாந்தோட்டைக்கு அப்பால் சுமார் 12 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளான சைப்ரஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று, பாதுகாப்பாக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
159.99 மீட்டர் நீளமுடையதும், ஏறத்தாழ 23,000 தொன் சரக்குகளை ஏற்றிச் சென்றதுமான MV AAL Gibraltar என்ற கப்பல், நான்கு மீட்பு இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வணிகக் கப்பல் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் துறைமுகத் தலைவர் ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், கப்பலின் பழுதுப்பார்ப்பு பணிகளுக்கு தேவையான தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்கியுள்ளதுடன், தற்போது பழுதுப்பார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.







