எல்ல-வெல்லவாய வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மலை உச்சியில் உள்ள பாறைகள் உறுதியற்ற தன்மையால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக எரிந்து கொண்டிருந்த தீயை, தீவிர முயற்சிகளுக்குப் பிறகு இன்று காலை அணைத்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்துள்ளார்.

முப்படைகள், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்புடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.

இத் தீ விபத்து ராவணா எல்ல வனப்பகுதிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here