அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் சம்பந்தப்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தாரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தள பதிவு ஒன்றில் அவர், தனது உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்த அவர், மேலும் பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் அனுராதபுரம் திரும்புவேன் எனவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன் சிகிச்சையின் போது தனக்கு ஆதரவளித்த மருத்துவ ஊழியர்கள், பொலிஸார், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.








