யாழ்ப்பாணம் – பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு வேலைத்திட்டத்தின் தொடக்கத்தையொட்டி, பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

இதனைச் சம்பந்தமாக கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்,

வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட மனித உரிமை என்றும், ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் வன்முறையின்றி வாழ்வதற்கான உரிமை உள்ளதாகவும், பிறரை வன்முறைக்கு உட்படுத்தாமல் வாழ்வது நமது பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.

செயல்முனைவு இன்று தொடங்கி, டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும், இதற்கிடையில் இலங்கையெங்கிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், டிஜிட்டல் உலகில் நிகழும் வன்முறைகளை தடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அரசியல் முரண்பாடுகள் உள்ள போதிலும் பிறரின் தனிப்பட்ட உரிமைகளுக்கு பாதிப்பின்றி, வெறுப்புப் பேச்சுகளை நிறுத்துவது பாராளுமன்றத்திலிருந்து தொடங்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here