யாழ்ப்பாணம் – ஜனாதிபதி பணிப்புரைக்கமைய, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸாரின் தொடர்ந்து நடைபெற்று வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நேற்று (23) பலர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின்: 517 கிராம், ஐஸ்: 798 கிராம், கொக்கெய்ன்: 4.87 கிராம், கஞ்சா: 1.877 கிலோ + 76,114 கஞ்சா செடிகள், குஷ்ரக போதைப்பொருள்: 1 கிராம், ஹஷீஷ் ரக: 14 கிராம், போதை மாத்திரைகள்: 560மாவா: 630 கிராம் ஆகியன கைப்பற்றப்பட்டன.

இதனுடன் தொடர்புடைய 1,038 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 16 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 1,038 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 23 பேரை மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here