தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்துடன் வெளியேறிய தர்ஷா குப்தாவிற்கு 20 நாட்களுக்கு கிடைத்த சம்பள விபரம் தெரியவந்துள்ளது.
தர்ஷா குப்தாவின் சம்பளம்
தர்ஷா குப்தா கோயம்புத்தூரை சேர்ந்தவர். பின்னர் பெங்களூருவில் டீச்சராக பணியாற்றி வந்தார். இதையடுத்து மாடலிங் மீது ஆர்வம் வந்து சென்னைக்கு வந்து அங்கே கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பிரபலமானார்.
இதன் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதையடுத்து இரட்டை ரோஜா போன்ற தொடரில் நடித்தார்.
ஆனால் இவற்றை எல்லாம் விட இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பை ஏற்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷா, அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

இதனால் சினிமாவிலும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அவர் முதன்முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இதனை தொடர்ந்து அக்டோபர் 6-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். அந்நிகழ்ச்சியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் தர்ஷாவும் ஒருவர்.ஆனால் ஏதோ காரணத்தினால் இவர்கள் ரசிகர்களை கவரவில்லை.
இதன் காரணமாக இவர் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுகுறைவான வாக்குகளை பெற்றதால் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த சீசனில் எலிமினேட் ஆகும் முதல் பெண் போட்டியாளர் தர்ஷா குப்தா தான்.
இந்த நிலையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றியதற்கு ஒரு நாளைக்கு 25 ஈயிரம் சம்பளம் பெற்றுள்ளார். அதற்காக அவருக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.









